மஹிபால் அதிரடி... பெங்களூரு அணி 181 ரன்கள் குவிப்பு..!


மஹிபால் அதிரடி... பெங்களூரு அணி 181 ரன்கள் குவிப்பு..!
x

image courtesy: IndianPremierLeague twitter

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 181 ரன்கள் எடுத்துள்ளது.

புதுடெல்லி,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்று வரும் ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி சிறப்பாக விளையாடி 55 ரன்கள் எடுத்தார். அத்துடன் ஐ.பி.எல் வரலாற்றில் 7 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 233 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 46 அரைசதங்களுடன் மொத்தம் 7036 ரன்கள் எடுத்துள்ளார்.

மற்றொரு தொடக்க வீரரான பாப் டு பிளிஸ்சிஸ் சிறப்பாக விளையாடி 45 ரன்கள் எடுத்து அவுட்டானார். கிளென் மேக்ஸ்வெல் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். மஹிபால் லோம்ரோர் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 54 ரன்கள் (6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story