டி.என்.பி.எல்: கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் விளாசி மதுரை திரில் வெற்றி


டி.என்.பி.எல்: கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் விளாசி மதுரை திரில் வெற்றி
x

கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசிய மதுரை பாந்தர்ஸ் சேலத்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

சேலம்,

8வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் சேலத்தில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இந்த தொடரில் இன்று சேலத்தில் நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - சீசெம் மதுரை பாந்தர்ஸ் மோதின.

இதில் டாஸ் வென்ற சேலம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையத்து, அந்த அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் - கவீன் களமிறங்கினர். அபிஷேக் 20 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த பிஸ்ட் 5 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய விஷால் வைத்யா தொடக்க வீரர் கவீனுடன் சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கவின் 45 பந்துகளில் 70 ரன்கள் விளாசி அவுட் ஆனார். சிறப்பாக ஆடிய வைத்யா 56 ரன்கள் குவித்தார். இறுதியில் சேலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மதுரை தொடக்க வீரர்களாக கேப்டன் ஹரி நிஷாந்த், சுரேஷ் லோகேஷ்வர் களமிறங்கினர். நிஷாந்த் 8 ரன்களில் அவுட் ஆனார். அடுத்துவந்த ஜேகதீசன் கவுசிக் - லோகேஷ்வருடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். லோகேஷ் 69 ரன்களில் அவுட் ஆன நிலையில் கவுசிக் 57 ரன்களில் அவுட் ஆனார்.

இறுதியில், கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மதுரை வீரர் முருகன் அஷ்வின் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசினார். இதனால், 19.3 ஓவர்களில் மதுரை 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சேலத்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை திரில் வெற்றிபெற்றது.


Next Story