டி.என்.பி.எல்.: திருப்பூரை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை திரில் வெற்றி
திருப்பூர் தமிழன்சை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை கிங்ஸ் திரில் வெற்றிபெற்றது.
சேலம்,
டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் இன்று 5வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் மோதின.
இதில், டாஸ் வென்ற கோவை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களாக சுஜெய், சுரேஷ் களமிறங்கினர். சுரேஷ் 6 ரன்னில் அவுட் ஆன நிலையில் சுஜெய் 27 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்துவந்த சச்சின், ஷாரூக்கான் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சச்சின் 30 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில் ஷாரூக்கான் 55 ரன்னில் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் கோவை 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணியின் தொடக்க வீரர்களாக ராதாகிருஷ்ணன், துஷார் களமிறங்கினர். ராதாகிருஷ்ணன் ஆட்டத்தின் முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் (0) அவுட் ஆனார். பின்னர், அமித் உடன் ஜோடி சேர்ந்த துஷார் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அமித் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கேப்டன் விஜய் சங்கர் 16 ரன்னிலும், அனிருத் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த முகமது அலி 35 ரன்னில் அவுட் ஆனார்.
பொறுப்புடன் ஆடிய துஷார் 57 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் திருப்பூர் 9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்படி, திருப்பூர் 20 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் திருப்பூரை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை கிங்ஸ் திரில் வெற்றிபெற்றது.