இந்தியாவுக்கு அடித்த லக்... ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது எப்படி?

image courtesy; ICC
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
துபாய்,
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 172 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி நிறைவடைந்ததை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி இந்தியாவுக்கு லக் அடித்துள்ளது. அதாவது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியடைந்ததன் மூலம் சில புள்ளிகளை இழந்து சரிவை சந்தித்துள்ளது. 2-வது இடத்தில் இருந்த இந்தியா தானாக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
புள்ளி பட்டியல்:-
1. இந்தியா - 64.58%
2. நியூசிலாந்து - 60.00%
3. ஆஸ்திரேலியா - 59.09%
4. வங்காளதேசம் -50.00%
5. பாகிஸ்தான் - 36.66%
6. வெஸ்ட் இண்டீஸ் - 33.33%
7. தென் ஆப்பிரிக்கா - 25.00%
8. இங்கிலாந்து - 19.44%
9. இலங்கை - 00.00%