லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்; சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்திய ஐதராபாத்
'லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட்' தொடரின் 3வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
ஜம்மு,
முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 'லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட்' தொடரின் 3வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஜம்முவில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் - டோயம் ஐதராபாத் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் தரப்பில் வால்டன் 40 ரன் எடுத்தார். இதையடுத்து 145 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சதர்ச் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 14 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 98 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது.
மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டு டி.எல்.எஸ் முறையில் வெற்றி பெற்ற அணி எது என்று அறிவிக்கப்பட்டது. டி.எல்.எஸ் முறையில் 5 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஐதராபாத் தரப்பில் பிபுல் சர்மா, சிவகாந்த் சுக்லா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.