லால் சிங் சத்தா படம் இந்திய ராணுவத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தியுள்ளது- இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்


லால் சிங் சத்தா படம் இந்திய ராணுவத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தியுள்ளது- இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்
x

லால் சிங் சத்தாவில் அமீர் கான் ஒரு முட்டாள் வேடத்தில் நடித்திருப்பதாக பிரபல கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார்.

லண்டன்,

பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கான், கரீனா கபூர் ஆகியோர் நடித்து நேற்று வெளியான திரைப்படம் "லால் சிங் சத்தா". 1994இல் ஹாலிவுட்டில் வெளியாகி ஆஸ்கர் விருது பெற்ற "பாரஸ்ட் கம்ப்" ஆங்கிலப் படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீ-மேக் படமாக இது எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் வெளியான போது இருந்தே படம் தொடர்பான சர்ச்சைகளும் வலுப்பெறத் தொடங்கியது. குறிப்பாக இப்படத்தில் அமீர் கான் இந்து தெய்வங்களை கேலி செய்ததாக கூறி உத்தரபிரதேசத்தை சேர்ந்த சனாதன் ரக்ஷக் சேனா என்ற இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் மான்டி பனேசர் இந்த திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இந்த திரைப்படம் குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய ராணுவம் மற்றும் சீக்கியர்களுக்கு லால் சிங் சத்தா அவமரியாதை, அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் பதிவில், "லால் சிங் சத்தாவில் அமீர் கான் ஒரு முட்டாள் வேடத்தில் நடித்திருப்பதாகவும் அந்த திரைப்படத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story