கிரிக்கெட்டை விட கபடி விளையாடுவது கடினம்; சொல்வது முன்னாள் கிரிக்கெட் வீரர்


கிரிக்கெட்டை விட கபடி விளையாடுவது கடினம்; சொல்வது முன்னாள் கிரிக்கெட் வீரர்
x

வருகிற 2-ந்தேதி ஆமதாபாத் நகரில் தொடங்க கூடிய கபடி போட்டி தொடரானது பெங்களூரு, புனே உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

புரோ கபடி லீக் போட்டிகளின் (பி.கே.எல்.) 10-வது சீசன் குஜராத்தின் ஆமதாபாத் நகரில் டிசம்பர் 2-ந்தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிகளை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் இதுபற்றி பேசும்போது, மும்பையில் கபடி போட்டிகள் இரவில் நடத்தப்படும். இதனை நிறைய பேர் கண்டு ரசிப்பார்கள். நானும் கூட்டத்தோடு சேர்ந்து சென்று, போட்டிகளை காண்பது வழக்கம்.

இது ஒருவரை தொடுதல் வழியே விளையாட கூடிய, ஒரு தொடர்புடைய போட்டி. ஹெல்மெட் ஒன்றை அணிந்து கொண்டு வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ளும் கிரிக்கெட்டை விளையாடுவது என்பது கபடி போட்டியை விட எளிது என கண்டறிந்தேன்.

இந்த கபடி போட்டியை விளையாட ஒருவருக்கு வளைந்து கொடுக்கும் தன்மை, வலிமை மற்றும் திறமையாக செயல்படுதல் ஆகியவை அவசியம் என்று கூறியுள்ளார்.

வருகிற 2-ந்தேதி ஆமதாபாத் நகரில் தொடங்க கூடிய இந்த போட்டியானது பெங்களூரு, புனே உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் நடைபெற உள்ளது. சென்னையில், டிசம்பர் 22 முதல் 27 வரையிலான நாட்களில் போட்டிகள் நடைபெறும்.


Next Story