மும்பை அணியின் மோசமான வரலாற்றை புதிய கேப்டன் பாண்ட்யா மாற்றுவாரா? ...ரசிகர்கள் எதிர்பார்ப்பு

image courtesy: twitter/@mipaltan
நடப்பு ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி, தனது முதலாவது ஆட்டத்தில் குஜராத் உடன் இன்று மோத உள்ளது.
அகமதாபாத்,
17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதன்படி, முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் - லக்னோ அணிகள் மோத உள்ளன. மற்றொரு லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோத உள்ளன.
ஐ.பி.எல். வரலாற்றில் மும்பை அணி, கடந்த 11 ஆண்டுகளாக தங்களது முதலாவது லீக் ஆட்டத்தில் வெற்றி கண்டதில்லை என்ற மோசமான வரலாறு உள்ளது. அந்த மோசமான வரலாற்றை புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மாற்றுவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story






