ஐ.பி.எல். வரலாற்றில் 2 மாபெரும் சாதனைகள் படைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்


ஐ.பி.எல். வரலாற்றில் 2 மாபெரும் சாதனைகள் படைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்
x

image courtesy: twitter/@IPL

தினத்தந்தி 8 May 2024 10:58 PM GMT (Updated: 9 May 2024 7:00 PM GMT)

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அபார வெற்றி பெற்றது.

ஐதராபாத்,

17-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஐதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக பதோனி 55 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி விளையாடியது. அந்த அணி வெறும் 9.4 ஓவர்களிலேயே 167 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89 ரன்களும், அபிஷேக் சர்மா 75 ரன்களும் அடித்தனர்.

இந்த போட்டியில் அபார வெற்றி பெற்றதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 2 மாபெரும் சாதனைகளை ஐதராபாத் படைத்துள்ளது. அவை விவரம் பின்வருமாறு:-

1. இந்த போட்டியில் 166 ரன்கள் இலக்கை ஐதராபாத் அணி 62 பந்துகள் மீதம் வைத்து எட்டிப்பிடித்தது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 100 ரன்னுக்கு மேலான இலக்கை அதிக பந்துகள் மீதம் வைத்து வென்ற அணி என்ற சாதனையை ஐதராபாத் படைத்தது.

அந்த பட்டியல்

1. சன்ரைசர்ஸ் ஐதராபாத் - 62 பந்துகள்

2. டெல்லி கேப்பிடல்ஸ் - 57 பந்துகள்

3. டெக்கான் சார்ஜர்ஸ் - 48 பந்துகள்

2. இந்த போட்டியில் ஐதராபாத் அணி 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 167 ரன்கள் சேர்த்தது. ஐ.பி.எல். தொடரில் முதல் 10 ஓவர்களில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இந்த சாதனை பட்டியலில் முதல் 3 இடங்களிலுமே ஐதராபாத் அணியே உள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த பட்டியல்:-

1. சன்ரைசர்ஸ் ஐதராபாத் - 167 ரன்கள்

2. சன்ரைசர்ஸ் ஐதராபாத் - 158 ரன்கள்

3. சன்ரைசர்ஸ் ஐதராபாத் - 148 ரன்கள்

4. மும்பை இந்தியன்ஸ் - 141 ரன்கள்


Next Story