ஐபிஎல் : மீண்டும் கேப்டனாக களமிறங்கும் ஷ்ரேயாஸ் அய்யர்


ஐபிஎல் : மீண்டும் கேப்டனாக களமிறங்கும் ஷ்ரேயாஸ் அய்யர்
x

Image : PTI 

தினத்தந்தி 14 Dec 2023 11:29 AM (Updated: 14 Dec 2023 11:54 AM)
t-max-icont-min-icon

வீரர்களின் மினி ஏலம் வருகிற 19-ந்தேதி துபாயில் நடக்கிறது

கொல்கத்தா,

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் வருகிற 19-ந்தேதி துபாயில் நடக்கிறது. ஏலப்பட்டியலில் 214 இந்தியர்கள், 119 வெளிநாட்டவர் என்று மொத்தம் 333 பேர் இடம் பிடித்திருப்பதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது. .

இந்த நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டனாக மீண்டும் ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார். நிதிஸ் ராணா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக கடந்த ஐபிஎல் தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் விளையாடவில்லை. இதனால் கொல்கத்தா அணியின் கேப்டனாக நிதிஸ் ராணா செயல்பட்டார்.

இதனிடையே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் மீண்டும் கொல்கத்தா அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் செயல்பட உள்ளார்.

1 More update

Next Story