ஐ.பி.எல்.: தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள்... பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளுக்கு பின்னடைவு


ஐ.பி.எல்.: தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள்... பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளுக்கு பின்னடைவு
x

நடப்பு ஐ.பி.எல். சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து இங்கிலாந்து வீரர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்.

புதுடெல்லி,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்னும் சில லீக் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், கொல்கத்தா அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பிளே ஆப் வாய்ப்பை இழந்து ஐ.பி.எல். தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. இதுவரையில் 62 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. எஞ்சிய 8 போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில், பிளே ஆப் வாய்ப்பிற்காக 7 அணிகள் போட்டி போட்டுகின்றன.

ஐ.பி.எல். தொடர் நிறைவடைந்ததும் ஜூன் 1-ம் தேதி ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்காக இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் நடப்பு ஐ.பி.எல். சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து நாடு திரும்புகின்றனர்.

அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம்பெற்றிருந்த வில் ஜேக்ஸ் மற்றும் ரீஸ் டாப்லி இன்று தாயகம் திரும்பி உள்ளனர். இது அந்த அணிக்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது. அதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லரும் தாயகம் திரும்பி உள்ளார். இதனால் ராஜஸ்தான் பின்னடைவை சந்தித்துள்ளது.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் மொயீன் அலி, பஞ்சாப் அணியின் கேப்டனாக உள்ள சாம் கர்ரண், பஞ்சாப் அணியின் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவ் மற்றும் ஆல் - ரவுண்டர் லிவிங்ஸ்டன் மற்றும் கொல்கத்தா அணியில் விளையாடும் பில் சால்ட் ஆகியோரும் இங்கிலாந்துக்கு திரும்பவுள்ளனர்.


Next Story