ஐ.பி.எல். 2024; கஸ் அட்கின்சன் விலகல் - மாற்று வீரரை அறிவித்த கொல்கத்தா அணி நிர்வாகம்


ஐ.பி.எல். 2024; கஸ் அட்கின்சன் விலகல் -  மாற்று வீரரை அறிவித்த கொல்கத்தா அணி நிர்வாகம்
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 19 Feb 2024 6:27 PM IST (Updated: 19 Feb 2024 6:45 PM IST)
t-max-icont-min-icon

2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் மார்ச் மாத இறுதியில் இந்தியாவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை,

2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் மார்ச் மாத இறுதியில் இந்தியாவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்த நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்நிலையில் இந்த தொடருக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் விலகி உள்ளதாகவும் அவருக்கு பதிலாக கொல்கத்தா அணியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருட ஏலத்தில் கொல்கத்தா அணியால் அட்கின்சன் ரூ.1 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அட்கின்சனின் பணிச்சுமையை நிர்வகிக்க விரும்புவதால் இந்த தொடரிலிருந்து அவர் விலக உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சமீராவை ரூ.50 லட்சத்துக்கு கொல்கத்த நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.



Next Story