ஐபிஎல் 2023: பஞ்சாப்புக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சு தேர்வு...!
ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
மொகாலி,
16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நேற்று கோலாகலமாக தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி குஜராத் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
அதன்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது.
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது.
Related Tags :
Next Story