சர்வதேச டி20 கிரிக்கெட்; ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்த முகமது ரிஸ்வான்


சர்வதேச டி20 கிரிக்கெட்; ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்த முகமது ரிஸ்வான்
x

Image Courtesy: AFP

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

நியூயார்க்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கனடா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. கனடா தரப்பில் அதிகபட்சமாக ஆரோன் ஜான்சன் 52 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது அமீர், ஹாரிஸ் ராப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 107 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 107 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரிஸ்வான் 53 ரன்கள் எடுத்தார். கனடா தரப்பில் தில்லன் ஹெய்லிகர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்ததன் மூலம் முகமது ரிஸ்வான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற ரோகித் சர்மாவின் (30 அரைசதம் - 118 இன்னிங்ஸ்) சாதனையை ரிஸ்வான் (30 அரைசதம் - 71 இன்னிங்ஸ்) சமன் செய்துள்ளார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக அதிக அரைசதம்:

முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) - 30 அரைசதம் (71 இன்னிங்ஸ்)

ரோகித் சர்மா (இதியா) - 30 அரைசதம் (118 இன்னிங்ஸ்)

பாபர் அசாம் (பாகிஸ்தான்) - 28 அரைசதம் (84 இன்னிங்ஸ்)

டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) - 27 அரைசதம் (98 இன்னிங்ஸ்)


Next Story