வண்ண பொடிகளை முகத்தில் வீசி பஸ்சில் ஹோலி கொண்டாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்...வைரல் வீடியோ...!


வண்ண பொடிகளை முகத்தில் வீசி பஸ்சில் ஹோலி கொண்டாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்...வைரல் வீடியோ...!
x

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி வரும் 9ம் தேதி அகமதாபாத்தில் தொடங்க உள்ளது.

அகமதாபாத்,

வட மாநிலத்தில் உற்சாகமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஹோலி பண்டிகையாகும். இந்த பண்டிகை வடமாநிலங்களில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியினர் ஹோலி பண்டிகையை வித்தியாசமாக கொண்டாடி உள்ளனர்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய இங்கு 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி வரும் 9ம் தேதி குஜராத்தில் தொடங்குகிறது.

இந்நிலையில் அந்த போட்டியில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்ற நினைப்பில் இந்தியா தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருவதையொட்டி இந்திய கிரிக்கெட் அணியனரும் ஹோலி பண்டிகையை கொண்டாடி உள்ளனர்.

அவர்கள் பயிற்சிக்கு செல்லும் பேருந்தில் கலர் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி பஸ்சினுள் ஹோலி பண்டிகையை ஆடி, பாடி கொண்டாடி உள்ளனர். பஸ்சினுள் கிரிக்கெட் வீரர்கள் ஹோலி பண்டிகை கொண்டாடுவதை வீடியோ எடுத்த இளம் வீரர் சுப்மன் கில் அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.




Next Story