டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த அணியும் படைத்திராத சாதனையை படைத்த இந்தியா


டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த அணியும் படைத்திராத சாதனையை படைத்த இந்தியா
x

9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

பார்படாஸ்,

20 அணிகள் இடையிலான 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 1-ம்தேதி தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா இணைந்து நடத்திய இந்த கிரிக்கெட் திருவிழாவில் பிரிஜ்டவுனில் நேற்றிரவு அரங்கேறிய மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் மோதின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 169 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன்மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா 2-வது முறையாக கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது.

இந்த தொடரில் இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் கோப்பையை வென்றுள்ளது. இதன் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் தோல்வியே சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றிய முதல் அணி என்ற மாபெரும் சாதனையை இந்தியா படைத்துள்ளது.

மேலும் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு சீசனில் அதிக வெற்றிகள் பெற்ற அணிகளின் சாதனை பட்டியலிலும் 8 வெற்றிகளுடன் தென் ஆப்பிரிக்காவை சமன் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது.

1 More update

Next Story