இப்போதுள்ள வீரர்கள் 270 பந்துகளை எதிர்கொண்டால்... - சேவாக் பேட்டி


இப்போதுள்ள வீரர்கள் 270 பந்துகளை எதிர்கொண்டால்... - சேவாக் பேட்டி
x

இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவதாக சேவாக் பாராட்டியுள்ளார்.

புதுடெல்லி,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை பின்பற்றி ரன்களை குவித்து வருகின்றனர். இருப்பினும் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் விளையாடாமல் அனைத்து நேரமும் அதிரடியாகவே விளையாடுவோம் என்று இங்கிலாந்து அடம்பிடித்து சில தோல்விகளையும் சந்தித்துள்ளது.

இதனால் எல்லா நேரமும் அதிரடியாக விளையாடாமல் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் விளையாடுங்கள் என்ற விமர்சனங்களை இங்கிலாந்து அணி சந்தித்து வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அதிரடியாக விளையாடுவதாக சேவாக் பாராட்டியுள்ளார். அத்துடன் ஐபிஎல், டெல்லி பிரீமியர் லீக் போன்ற தொடர்கள் தங்களது காலத்தில் இருந்திருந்தால் 270 பந்துகளில் 300க்கு பதிலாக 400 ரன்கள் அடித்திருப்பேன் என்றும் சேவாக் கூறியுள்ளார். எனவே தற்போதுள்ள வீரர்கள் பிரையன் லாராவை மிஞ்சி 400 ரன்களை கூட எளிதாக அடிப்பார்கள் என்று தெரிவிக்கும் அவர் இது குறித்து டெல்லி பிரீமியர் லீக் தொடக்க விழாவில் பேசியது பின்வருமாறு:-

"இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓவருக்கு 5 ரன்கள் அடித்து விளையாடுகிறது. எங்களுடைய காலங்களில் ஆஸ்திரேலியா தான் ஓவருக்கு 4 ரன்கள் அடிப்பார்கள். நீங்கள் அட்டாக் செய்து விளையாடும் போது டெஸ்ட் போட்டியை வெல்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். என்னுடைய பையன் டெல்லி அண்டர்-16 அணிக்காக விளையாடுகிறார். நாங்கள் 18 வயதில் இருந்த போது ஐபிஎல் இல்லை. ஆனால் தற்போதைய வீரர்களுக்கு ஐபிஎல், டிபிஎல் போன்ற தொடர்கள் வாய்ப்பு கொடுக்கின்றன.

எனவே யாராவது ஒருவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடும் ஆட்டத்தை மெருகேற்றினால் அதை ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது? அனைத்தையும் விட ரசிகர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை அதிகமாக பார்ப்பதையே நாம் விரும்புகிறோம். நான் 270 பந்துகளில் முச்சதம் அடித்தேன். ஆனால் இப்போதுள்ள வீரர்கள் அதே பந்துகளை எதிர்கொண்டால் 400 ரன்களை கூட அடிப்பார்கள்" என்று கூறினார்.


Next Story