ஐசிசி விருது 2023; சிறந்த டெஸ்ட் வீரராக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் தேர்வு

image courtesy;AFP
இவர் கடந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1210 ரன்கள் குவித்துள்ளார்.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி 2023ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கு 4 பேரின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்து இருந்தது. அதில் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டுமே இடம்பெற்றிருந்தார்.
அதன்படி அதில் நம்பர் 1 டெஸ்ட் பந்து வீச்சாளரான இந்திய அணியை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலிய வீரர்களான டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா மற்றும் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இவர்களில் சிறந்த டெஸ்ட் வீரர் விருதை ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேனான உஸ்மான் கவாஜா வென்றுள்ளார். இவர் கடந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1210 ரன்கள் குவித்துள்ளார்.
Related Tags :
Next Story