ஐசிசி 50 ஓவர் தரவரிசை; இந்திய அணி முதலிடத்தில் நீடிப்பு..!!

image courtesy; twitter/ @ICC
ஐசிசி 50 ஓவர் ( ஒருநாள்) தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
துபாய்,
10 அணிகள் கலந்து கொண்ட 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்நிலையில் சில லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் ஐசிசி அணிகளுக்கான புதிய 50 ஓவர் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்திருந்தாலும் அந்த அணி 2-வது இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் இன்னும் வெற்றி கணக்கை தொடங்காததால் தரவரிசையில் 4-வது இடத்திற்கு சரிந்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
நியூசிலாந்து 5-வது இடத்திலும், இங்கிலாந்து 6-வது இடத்திலும் உள்ளன. மற்ற இடங்களில் முறையே இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடர்கின்றன.