டி.என்.பி.எல்: கவின் - விஷால் வைத்யா அதிரடி ஆட்டம்: சேலம் 180 ரன்கள் குவிப்பு


டி.என்.பி.எல்: கவின் - விஷால் வைத்யா அதிரடி ஆட்டம்: சேலம் 180  ரன்கள் குவிப்பு
x

Image Courtesy: @TNPremierLeague

சேலம் தரப்பில் அதிகபட்சமாக கவின் 70 ரன், விஷால் வைத்யா 56 ரன் எடுத்தனர்.

சேலம்,

8-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி நேற்று சேலத்தில் தொடங்கியது . இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இந்த தொடரில் இன்று சேலத்தில் நடைபெற்று வரும் 3வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற சேலம் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து சேலம் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் மற்றும் கவின் ஆகியோர் களம் இறங்கினர். இதில் அபிஷேக் 20 ரன்னிலும், அடுத்து வந்த ராபின் பிஸ்ட் 5 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து விஷால் வைத்யா களம் இறங்கினார். ஒருபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கவின் 45 பந்தில் 70 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுயடுத்து களம் இறங்கிய விவேக் 1 ரன், சன்னி சந்து 10 ரன், ஹரிஷ் குமார்1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து விஷால் வைத்யா உடன் ஷிஜித் சந்திரன் ஜோடி சேர்ந்தார்.

இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விஷால் வைத்யா 28 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் சேலம் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. சேலம் தரப்பில் அதிகபட்சமாக கவின் 70 ரன், விஷால் வைத்யா 56 ரன் எடுத்தனர். மதுரை அணி தரப்பில் முருகன் அஸ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 181 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி ஆட உள்ளது.


Next Story