வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் நியூசிலாந்து...!
நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
சில்ஹெட்,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 310 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து வில்லியம்சனின் சதம் மூலம் 317 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 7 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 338 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
வங்காளதேச அணி தரப்பில் ஷாண்டோ 105 ரன், ரஹீம் 67 ரன் எடுத்தனர். இதையடுத்து 332 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது. நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய டாம் லாதம் 0 ரன், கான்வே 22 ரன் அடுத்து அவுட் ஆகினர்.
இதையடுத்து களம் இறங்கிய வில்லியம்சன் 11 ரன், நிக்கோல்ஸ் 2 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 60 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.