முதல் ஒருநாள் போட்டி; வில் யங் அதிரடி சதம்...வங்காளதேசத்திற்கு 245 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து..!


முதல் ஒருநாள் போட்டி; வில் யங் அதிரடி சதம்...வங்காளதேசத்திற்கு  245 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து..!
x

Image Courtesy: Twitter

தினத்தந்தி 17 Dec 2023 9:52 AM IST (Updated: 17 Dec 2023 11:58 AM IST)
t-max-icont-min-icon

நியூசிலாந்து அணி தரப்பில் வில் யங் 105 ரன்கள் அடித்தார்.

டுனெடின்,

வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களம் இறங்கினர். இதில் ரவீந்திரா மற்றும் அடுத்து களம் இறங்கிய ஹென்றி நிக்கோல்ஸ் இருவரும் ரன் எடுக்காமல் அவுட் ஆகினர்.

இதையடுத்து கேப்டன் டாம் லாதம் களம் இறங்கினார். வில் யங் மற்றும் லாதம் இணை பொறுமையாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஆட்டத்தின் 20வது ஓவரில் மழை குறுக்கிட்டதால் சிறிது நேரம் ஆட்டம் தடைப்பட்டது.

இதையடுத்து மழை நின்ற பின்னர் ஆட்டம் 30 ஓவர்களாக குறைக்கப்பட்டு மீண்டும் தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் ஆடிய யங் - லாதம் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லாதம் 92 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து மார்க் சாம்ப்மேன் களம் இறங்கினார்.

மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் யங் சதம் அடித்த நிலையில் 105 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 30 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. இதையடுத்து டிஎல்எஸ் முறையில் 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி ஆட உள்ளது.


Next Story