இங்கிலாந்து வெற்றி: ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன..?


இங்கிலாந்து வெற்றி: ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன..?
x

image courtesy: AFP

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

நாட்டிங்காம்,

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 241 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற நிலையில் கடைசி இடத்தில் இருந்த இங்கிலாந்து கிடுகிடுவென 3 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளது.

6-வது இடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இந்திய அணி முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா 2வது இடத்திலும், நியூசிலாந்து 3வது இடத்திலும், இலங்கை 4வது இடத்திலும், பாகிஸ்தான் 5வது இடத்திலும் உள்ளன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்:

1. இந்தியா - 68.52 சதவீதம்

2. ஆஸ்திரேலியா - 62.50 சதவீதம்

3. நியூசிலாந்து - 50.00 சதவீதம்

4. இலங்கை - 50.00 சதவீதம்

5. பாகிஸ்தான் - 36.66 சதவீதம்

6. இங்கிலாந்து - 31.25 சதவீதம்

7. தென் ஆப்பிரிக்கா - 25.00 சதவீதம்

8. வங்காளதேசம் - 25.00 சதவீதம்

9. வெஸ்ட் இண்டீஸ் - 22.22 சதவீதம்


Next Story