இங்கிலாந்து 20 ஓவர் தொடரை வெற்றியுடன் தொடங்குமா நியூசிலாந்து? முதலாவது போட்டி இன்று நடக்கிறது


இங்கிலாந்து 20 ஓவர் தொடரை வெற்றியுடன் தொடங்குமா நியூசிலாந்து? முதலாவது போட்டி இன்று நடக்கிறது
x

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செஸ்டர் லீ ஸ்டிரிட்டில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

டிம் சவுதி தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக நான்கு 20 ஓவர் மற்றும் 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செஸ்டர் லீ ஸ்டிரிட்டில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ, டேவிட் மலான், லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கர்ரன், ஹாரி புரூக் உள்ளிட்ட அதிரடி சூரர்களும், நியூசிலாந்து அணியில் கேப்டன் டிம் சவுதி, டிவான் கான்வே, டேரில் மிட்செல், மார்க் சாப்மேன் உள்பட தரமான வீரர்களும் அங்கம் வகிக்கின்றனர். என்றாலும் உள்ளூர் சூழலில் ஆடுவது இங்கிலாந்துக்கு சாதகமான அம்சமாகும்.

இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய 23 இருபது ஓவர் போட்டிகளில் 14-ல் இங்கிலாந்தும், 8-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story