துலீப் கோப்பை: கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி 525 ரன்களில் ஆல் அவுட்


துலீப் கோப்பை: கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி 525 ரன்களில் ஆல் அவுட்
x

image courtesy: BCCi

இந்தியா சி தரப்பில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 111 ரன்கள் குவித்தார்.

அனந்தபூர்,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பையின் 2-வது சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின. இதில் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி, அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணியை எதிர்கொண்டுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்தியா பி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா சி அணி முதல் இன்னிங்சில் 525 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 111 ரன்கள் குவித்தார். இந்தியா பி தரப்பில் முகேஷ் குமார் மற்றும் ராகுல் சஹார் தலா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா பி அணி 2-வது நாளில் விக்கெட் இழப்பின்றி 124 ரன்கள் அடித்துள்ளது. ஜெகதீசன் 67 ரன்களுடனும், அபிமன்யூ ஈஸ்வரன் 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இதன் மற்றொரு ஆட்டத்தில் அகர்வால் தலைமையிலான இந்தியா ஏ அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா டி அணியுடன் விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்தியா ஏ முதல் இன்னிங்சில் 290 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா டி 183 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பின்னர் 107 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ 2-வது நாளில் 1 விக்கெட்டை இழந்து 115 ரன்கள் அடித்துள்ளது.


Next Story