"தோனிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை" - சி.எஸ்.கே. பயிற்சியாளர் ஆதங்கம்


தோனிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை - சி.எஸ்.கே. பயிற்சியாளர் ஆதங்கம்
x

டோனி விக்கெட் கீப்பிங் செய்வதில் இயற்கையாகவே திறமை கொண்டவர் என்று ஸ்டீபன் பிளமிங் கூறினார்.

சென்னை,

சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஒரு பேட்டியில் கூறும்போது, 'பென் ஸ்டோக்ஸ் காயம் ஒரு பின்னடைவாகும். அவர் மேலும் ஒரு வாரம் விளையாட முடியாது. அது குறித்து அதிகம் பேச விரும்பவில்லை. காயத்தில் இருந்து மீண்டு முழு உடல் தகுதியை எட்ட அவர் கடுமையாக உழைத்து வருகிறார். அவருக்கு சற்று அதிர்ஷ்டம் தேவையாகும்.

டோனி நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார். அவர் தனது காயத்தை நன்றாக சமாளித்து வருகிறார். அவர் அணிக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கக்கூடியவர். காயம் காரணமாக அணிக்கு பங்களிக்க முடியாது என்று உணர்ந்தால் அவர் வெளியில் உட்கார்ந்து இருப்பார்.

மேலும், டோனியின் விக்கெட் கீப்பிங் குறித்து அவர் கூறுகையில், டோனி விக்கெட் கீப்பிங் செய்வதில் இயற்கையாகவே திறமை கொண்டவர் என்றும், அவரது விக்கெட் கீப்பிங் திறமைக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story