ஐசிசி டி20 உலகக் கோப்பை: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு யோகி ஆதித்யநாத் வாழ்த்து


ஐசிசி டி20 உலகக் கோப்பை: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு யோகி ஆதித்யநாத் வாழ்த்து
x

ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற யு-19 இந்திய மகளிர் அணிக்கு உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லக்னோ,

19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்தது. இத்தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இந்தியா - இங்கிலாந்து மோதின. இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வீராங்கனைகள் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் 17.1 ஓவரில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 14 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றிபெற்றது. இதன் மூலம், இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 19 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றது.

இந்த சூழலில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற யு-19 இந்திய மகளிர் அணிக்கு உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "ஜெய் ஹோ!... வரலாற்று சிறப்புமிக்க ஐசிசி மகளிர் யு19டி20 உலகக்கோப்பையை தேசத்தின் மகள்கள் இன்று வென்றுள்ளனர். முழு குழுவிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

அணியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் அடையப்பட்ட இந்த வரலாற்று சாதனை, நாட்டின் மற்றும் உலகின் திறமைகளுக்கு உத்வேகம் அளிக்கிறது" என்று அதில் யோகி ஆதியநாத் பதிவிட்டுள்ளார்.


Next Story