சென்னை அணி அபார பந்துவீச்சு...142 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்


சென்னை அணி அபார பந்துவீச்சு...142 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்
x

சென்னை அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சிமர்ஜீத் சிங் 3 விக்கெட், துஷார் தேஸ்பண்டே 2 விக்கெட் வீழ்த்தினர்.

சென்னை,

17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கிய 61-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி , ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் , ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர். சிறப்பாக விளையாடி தொடக்க விக்கெட்டுக்கு 43 ரன்கள் சேர்த்த நிலையில் ஜெய்ஸ்வால் , 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் , தொடர்ந்து பட்லர் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த சாம்சன் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுபுறம் ரியான் பராக் பொறுப்புடன் ஆடி ரன்கள் குவித்தார். ரியான் பராக் , துருவ் ஜுரேல் இருவரும் இணைந்து பந்துகளை , பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்டனர். பராக் 47 ரன்களும் , ஜுரேல் 28 ரன்களும் எடுத்தனர்

இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சிமர்ஜீத் சிங் 3 விக்கெட், துஷார் தேஸ்பண்டே 2 விக்கெட் வீழ்த்தினர்.தொடர்ந்து 142 ரன்கள் இலக்குடன் சென்னை அணி விளையாடுகிறது.


Next Story