ஐ.பி.எல் வரலாற்றில் வேகப்பந்து வீச்சாளராக அரிதான சாதனை படைத்த புவனேஷ்வர் குமார் - விவரம்


ஐ.பி.எல் வரலாற்றில் வேகப்பந்து வீச்சாளராக அரிதான சாதனை படைத்த புவனேஷ்வர் குமார் - விவரம்
x

Image Courtesy: AFP 

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

முல்லன்பூர்,

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டம் முல்லன்பூரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் தரப்பில் அதிரடியாக ஆடிய நிதிஷ் ரெட்டி 64 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் முலம் 2 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது.

இதையடுத்து இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த நிதிஷ் ரெட்டிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 32 ரன் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் ஷிகர் தவான் மற்றும் ப்ரம்சிம்ரன் சிங்கை அவுட் ஆக்கினார். இதில் ஷிகர் தவான் ஸ்டம்பிங் முறையில் அவுட் ஆனார்.

குறிப்பாக பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஸ்டம்பிங் முறையில் அவுட் ஆவார்கள். ஆனால் நேற்று வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமாருக்கு எதிராக தவான் ஸ்டம்பிங் முறையில் அவுட் ஆனார். புவனேஷ்வர் குமார் ஏற்கனவே கடந்த 2013-ல் கொல்கத்தா வீரர் மன்விந்தர் பிஸ்லாவை ஸ்டம்பிங் முறையில் அவுட்டாக்கியுள்ளார்.

இதன் வாயிலாக ஐ.பி.எல் வரலாற்றில் ஸ்டம்பிங் முறையில் 2 விக்கெட்டுகளை எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற அரிதான சாதனையை புவனேஷ்வர் குமார் படைத்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் ஸ்டம்பிங் முறையில் விக்கெட் எடுத்த வேகப்பந்து வீச்சாளர்கள்;

ராபின் உத்தப்பா - அகில் - 2008

கிரேம் ஸ்மித் - ஷான் பொல்லாக் - 2008

கார்செல்டின் - சமிந்தா வாஸ் - 2009

டேன் கிறிஸ்டியன் - முனாப் படேல் - 2011

மன்விந்தர் பிஸ்லா - புவனேஷ்வர் குமார் - 2013

கவுதம் கம்பீர் - ஷேன் வாட்சன் - 2013

சுரேஷ் ரெய்னா - கைரன் பொல்லார்ட் - 2014

பிரண்டன் மெக்கல்லம் - சந்தீப் சர்மா - 2016

ஷிகர் தவான் - புவனேஷ்வர் குமார் - 2024


Next Story