தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடரில் தோனி ஆலோசகராக செயல்பட பிசிசிஐ மறுப்பு?


தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடரில் தோனி ஆலோசகராக செயல்பட பிசிசிஐ மறுப்பு?
x

Image Courtesy: PTI 

ஏற்கனவே இந்திய அணிக்காக தற்போது விளையாடும் வீரர்கள் வெளிநாட்டு டி20 தொடர்களில் பங்கேற்க அனுமதி கிடையாது.

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடக்கும் இந்த போட்டியையொட்டி உருவாக்கப்பட்ட 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

அந்த வகையில் ஜோகனஸ்பர்க்கை அடிப்படையாக கொண்டு உதயமாகும் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிர்வாகம் வாங்கியுள்ளது. இந்த நிலையில் ஜோகனஸ்பர்க் அணியின் பயிற்சியாளர் அல்லது ஆலோசகராக சென்னை அணியின் கேப்டன் தோனியை நியமிக்க அந்த அணி முடிவு செய்து இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தோனி அயல்நாட்டு தொடர்களில் பயிற்சியாளர் அல்லது ஆலோசகராக செயல்பட பிசிசிஐ மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு தோனி செய்லபட விரும்பினால் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என பிசிசிஐ கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும் போது, "அனைத்து வகையான விளையாட்டுகளிலிருந்தும் ஓய்வு பெறும் வரை, உள்நாட்டு வீரர்கள் உட்பட எந்த இந்திய வீரரும் வேறு எந்த லீக்கிலும் பங்கேற்க முடியாது என்பது தெளிவாகிறது. எந்தவொரு வீரரும் இந்த வரவிருக்கும் லீக்குகளில் பங்கேற்க விரும்பினால், அவர் பிசிசிஐ உடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்கும்போது மட்டுமே அவ்வாறு செய்ய முடியும்" என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்திய அணிக்காக தற்போது விளையாடும் வீரர்கள் வெளிநாட்டு டி20 தொடர்களில் பங்கேற்க அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story