விஜய் ஹசாரே கோப்பை: தமிழக அணியின் கேப்டனாக பாபா இந்திரஜித் நியமனம்
தமிழக அணி நவம்பர் 12-ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் பீகாரை எதிர்கொள்கிறது.
சென்னை,
2022-2023 ஆண்டுக்கான விஜய் ஹசாரே கோப்பை பெங்களூருவில் நவம்பர் 12 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான தமிழக அணியின் கேப்டனாக பாபா இந்திரஜித் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் துணை கேப்டனாக வாஷிங்டன் சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு நவம்பர் 12-ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் பீகாரை எதிர்கொள்கிறது. அதன் பிறகு தமிழக அணி, ஆந்திரா (நவம்பர் 13), சத்தீஸ்கர் (நவம்பர் 15), கோவா (நவம்பர் 17), அரியானா (நவம்பர் 19), அருணாச்சல பிரதேசம் (நவம்பர் 21) மற்றும் கேரளா (நவம்பர் 23) ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது.
முந்தைய சீசனில் விஜய் ஹசாரே கோப்பையின் இறுதிப் போட்டியில் இமாச்சல பிரதேசத்திடம் தோல்வி அடைந்து இருந்த தமிழக அணி இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்போடு களமிறங்குகிறது.
விஜய் ஹசாரே கோப்பைகான தமிழக அணியின் வீரர்கள் பெயர் பின்வருமாறு:
பாபா இந்திரஜித் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர் (துணை கேப்டன்), பி சாய் சுதர்சன், ஆர் சாய் கிஷோர், எம் ஷாருக் கான், டி நடராஜன், சந்தீப் வாரியர், என் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), ஆர் சிலம்பரசன், எம் சித்தார்த், பாபா அபராஜித், என் எஸ் சதுர்வேத், எல் சூர்யபிரகாஷ், ஆர் சோனு யாதவ், ஜே கௌசிக்.