பார்டர்-கவாஸ்கர் தொடரில் இருந்து விலகும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர்..? - வெளியான தகவல்


பார்டர்-கவாஸ்கர் தொடரில் இருந்து விலகும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர்..? - வெளியான தகவல்
x

Image Courtesy: ICC Twitter

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் ஆட உள்ளது.

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. ஏற்கனவே கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் காத்திருக்கிறது.

அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இருந்து ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீன் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேமரூன் க்ரீன் முதுகு பகுதியில் சந்தித்த காயத்துக்காக நியூசிலாந்துக்கு சென்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த அறுவை சிகிச்சை செய்தால் குணமடைய உடல்நிலை சரியாக 2 முதல் 3 மாதங்கள் தேவைப்படும் எனவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலக அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story