ஆசிய கோப்பை தொடர்; இந்தியாவின் பிளேயிங் லெவன் இது தான் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்


ஆசிய கோப்பை தொடர்; இந்தியாவின் பிளேயிங் லெவன் இது தான் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
x

Image Courtesy: AFP

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

மும்பை,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இந்த தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு வரும் 30ம் தேதி ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் தொடங்குகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகாத திலக் வர்மா இடம் பிடித்துள்ளார். மேலும் காயத்தில் இருந்து குணமடைந்த ஸ்ரேய்ஸ் அய்யர், கே.எல்.ராகுலும், சஞ்சு சாம்சன் ரிசர்வ் வீரராகவும் இடம் பிடித்துள்ளனர்.

இதையடுத்து ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தேர்வு குறித்தும், பிளேயிங் லெவன் குறித்தும் பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தான் தேர்வு செய்த பிளேயிங் லெவன் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ஆசிய கோப்பை தொடருக்காக தான் தேர்வு செய்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் மற்றும் கில், 3ம் வரிசையில் விராட் கோலி, 4வது இடத்தில் திலக் வர்மா அல்லது ஸ்ரேய்ஸ் அய்யர் ஆகியோரை தேர்வு செய்கிறேன்.

5ம் இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே.எல்.ராகுலும், ஆல் ரவுண்டர்களாக ஹர்த்திக் பாண்ட்யா மற்றும் ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்வேன். 8 முதல் 11 இடங்களில் முறையே குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரை தேர்வு செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தேர்வு செய்த அணி விவரம்:-

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் அய்யர் / திலக் வர்மா, கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்த்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா.


Next Story