ஆசிய கோப்பை கிரிக்கெட்; இந்திய அணியில் மீண்டும் இணைந்தார் பும்ரா..!!

image courtesy; AFP
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 'சூப்பர் 4' சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
கொழும்பு,
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஜஸ்பிரித் பும்ரா தனது முதல் குழந்தை பிறப்பைக் கருத்தில் கொண்டு தாயகம் திரும்பினார். இதனால் செப்டம்பர் 4 ஆம் தேதி நடைபெற்ற இந்தியா- நேபாளம் இடையேயான போட்டியில் அவர் பங்குபெறவில்லை.
அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தை பிறப்புக்கு பின்னர் இலங்கை திரும்பிய அவர், இன்று அணியுடன் இணைந்துள்ளார். இதன்மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டியில் அவர் களம் இறங்குவது உறுதியாகியுள்ளது.
Related Tags :
Next Story