ஜாம்பவான்கள் அனில் கும்ப்ளே, வார்னே ஆகியோரை முந்திய அஸ்வின்
டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
ராஜ்கோட்,
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, ரோகித் மற்றும் ஜடேஜா ஆகியோரின் அபார சதத்தின் உதவியுடன் 445 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலி மற்றும் பென் டக்கெட் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஜாக் கிராலியின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இது டெஸ்ட் போட்டிகளில் அவரது 500-வது விக்கெட்டாக பதிவானது.
இதன் மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். இந்தியா தரப்பில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது பவுலர் என்ற வரலாற்றையும் படைத்துள்ளார். மேலும் அவர் பல ஜாம்பவான்களை முந்தி சாதனை பட்டியல்களிலும் இடம்பிடித்துள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு;-
1. குறைந்த போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஜாம்பவான்கள் அனில் கும்ப்ளே, ஷேன் வார்னே ஆகியோரை முந்தி 2-வது இடம்பிடித்துள்ளார்.
அந்த பட்டியல்;-
1.முத்தையா முரளிதரன் - 87 போட்டிகள்
2. அஸ்வின் -98 போட்டிகள்
3.அனில் கும்ப்ளே - 105 போட்டிகள்
4.ஷேன் வார்னே - 108 போட்டிகள்
5.கிளென் மெக்ராத் - 110 போட்டிகள்
2. மேலும் குறைந்த பந்துகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 2-வது இடம்பிடித்து அசத்தியுள்ளார்.
அந்த பட்டியல்;-
1. கிளென் மெக்ராத்- 25,528 பந்துகள்
2. அஸ்வின் - 25,714 பந்துகள்
3. ஜேம்ஸ் ஆண்டர்சன் - 28,150 பந்துகள்
4. ஸ்டூவர்ட் பிராட் - 28,430 பந்துகள்
5. கோர்ட்னி வால்ஷ் - 28,833 பந்துகள்