அலெக்ஸ் கேரி, சுமித் அரை சதம்.. இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா


அலெக்ஸ் கேரி, சுமித் அரை சதம்.. இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா
x

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 77 ரன்கள் அடித்தார்.

செஸ்டர் லீ- ஸ்டிரீட்,

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி செஸ்டர் லீ-ஸ்டிரீட்டில் நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன மேத்யூ ஷார்ட் 14 ரன்களிலும், மார்ஷ் 24 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் சுமித் - கேமரூன் கிரீன் இணை பொறுப்புடன் விளையாடி அணியை முன்னெடுத்து சென்றனர். கிரீன் 42 ரன்களிலும், சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த சுமித் 60 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய வீரர்கள் அதிரடியாக விளையாட ஆஸ்திரேலியா 300 ரன்களை கடந்தது. முடிவில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 304 ரன்கள் குவித்துள்ளது. அலெக்ஸ் கேரி 77 ரன்களுடனும் (65 பந்துகள்), ஆரோன் ஹார்டி 44 ரன்களுடம் (26 பந்துகள்) களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 305 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story