டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மோசமான சாதனை படைத்த ஆப்கானிஸ்தான்


டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மோசமான சாதனை படைத்த ஆப்கானிஸ்தான்
x

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 56 ரன்களில் சுருண்டது.

டிரினிடாட்,

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்க அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 56 ரன்களில் சுருண்டது.

இதன் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அரையிறுதி ஆட்டத்தில் குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆன அணி என்ற மோசமான சாதனையை ஆப்கானிஸ்தான் படைத்துள்ளது.

இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.


Next Story