வங்காளதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட்; முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 180 ரன்களுக்கு ஆல் அவுட்..!


வங்காளதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட்; முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 180 ரன்களுக்கு ஆல் அவுட்..!
x

Image Courtesy: @BLACKCAPS

தினத்தந்தி 8 Dec 2023 8:55 AM GMT (Updated: 8 Dec 2023 10:07 AM GMT)

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

டாக்கா,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து 150 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணியினர் நியூசிலாந்து வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

வெறும் 66.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வங்காளதேச அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி வங்காளதேச வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.

அந்த அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 55 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. டேரில் மிட்செல் 12 ரன்களிலும், கிளென் பிலிப்ஸ் 5 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.இதனையடுத்து நேற்று நடைபெறவிருந்த 2-வது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது.

இதையடுத்து 3வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி வங்காளதேச வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியில் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 37.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் கிளென் பிலிப்ஸ் 87 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி தற்போது முதல் இன்னிங்சில் 8 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து வங்காளதேச அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி ஆடி வருகிறது.


Next Story