2வது டி20 போட்டி; இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி..!


2வது டி20 போட்டி; இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி..!
x

Image Courtesy: @ICC

இவ்விரு அணிகள் இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

கிரெனடா,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ப்ரண்டன் கிங் மற்றும் ரோவ்மன் பவலின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களே எடுத்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என வெஸ்ட் இண்டீஸ் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.


Next Story