2-வது டி20 போட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்த அயர்லாந்து


2-வது டி20 போட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்த அயர்லாந்து
x

image courtesy: twitter/@ICC

தென் ஆப்பிரிக்கா - அயர்லாந்து இடையிலான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

அபுதாபி,

தென் ஆப்பிரிக்கா - அயர்லாந்து இடையிலான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அபுதாபியில் நடைபெற்றது. இதில் முதலாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன பால் ஸ்டிர்லிங் - ரோஸ் ஆடிர் வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இதன் மூலம் அயர்லாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோஸ் ஆடிர் 100 ரன்களும், பால் ஸ்டிர்லிங் 52 ரன்களும் குவித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக வியான் முல்டர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 185 மட்டுமே அடித்தது. இதன் மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ரீசா ஹென்ரிக்ஸ் மற்றும் மேத்யூ பிரீட்ஸ்க் தலா 51 ரன்கள் அடித்தனர். அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக மார்க் ஆடிர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்துள்ளது.


Next Story