டி20 உலகக்கோப்பை; இந்திய அணியில் 6வது வரிசையில் இந்த வீரர்தான் ஆடுவார் - முன்னாள் வீரர் கணிப்பு


டி20 உலகக்கோப்பை; இந்திய அணியில் 6வது வரிசையில் இந்த வீரர்தான் ஆடுவார் - முன்னாள் வீரர் கணிப்பு
x

Image Courtesy: @BCCI / @IamShivamDube

தினத்தந்தி 19 Jan 2024 7:44 PM IST (Updated: 19 Jan 2024 7:51 PM IST)
t-max-icont-min-icon

20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.

சென்னை,

20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. அதன்படி தொடரில் கலந்து கொள்ள இருக்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதில் குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், நமீபியா அணிகளும், குரூப் சி-யில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா,பாப்புவா நியூ கினியா அணிகளும், குரூப் டி-யில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து, நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியில் 6வது வரிசையில் ரிங்கு சிங்தான் ஆடுவார் என இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ரிங்கு சிங் நிச்சயமாக பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும். கடைசி ஓவர்களில் எதிரணி பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கிறார். அவர் மட்டுமே அதைச் செய்ய வல்லவர். டி20 போட்டிகளில் அவர் ஆடும் விதத்தைப் பாருங்கள்.

அவர் நிச்சயமாக உலகக்கோப்பையில் விளையாடுவார். 6வது வரிசையில் ரிங்கு சிங் நிச்சயமாக ஆடுவார். என்ன ஒரு அருமையான வீரர். அவர் சிரமமின்றி சிக்சர்களை அடிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story