கோலியை கேலி செய்த ஆஸ்திரேலிய பத்திரிகையாளர்


கோலியை கேலி செய்த ஆஸ்திரேலிய பத்திரிகையாளர்
x
தினத்தந்தி 14 Sept 2017 9:02 AM (Updated: 14 Sept 2017 9:02 AM)
t-max-icont-min-icon

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலியை ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் ஒருவர் துப்புறவு பணியாளர் என்று கூறியதற்கு இந்திய ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலியப் பத்திகையாளர் டென்னிஸ் ப்ரீட்மேன் என்பவர், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தைக் கோலி சுத்தப்படுத்தும் புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டு, உலக லெவன் போட்டிக்காகத் துப்புரவுப் பணியாளர்கள் மைதானத்தைச் சுத்தப்படுத்துகிறார்கள் என டுவீட் செய்துள்ளார்.

ஆனால் அந்தப் புகைப்படம் தூய்மை இந்தியா திட்டத்துக்காக கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் ஈடன் கார்டன் மைதானத்தைச் சுத்தம்செய்தபோது எடுக்கப்பட்டது.

இந்த டுவிட்டால் கோலி ரசிகர்கள் கொதித்துள்ளனர்

ரசிகர் ஒருவர், ”அவர் வளர்ந்து வந்த இடத்தை அவர் சுத்தம்செய்கிறார். நீங்கள் உங்கள் மனதை சுத்தம்செய்யுங்கள்” என டுவீட் செய்துள்ளார்.

மேலும், பாகிஸ்தான் ரசிகர்களும், நாங்கள் கோலி மீது அதிக மரியாதை வைத்துள்ளோம், இதுபோன்ற விமர்சனங்களை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்கமாட்டோம் என தெரிவித்துள்ளனர்.


Next Story