நாளை நமதே- சோலார் பேனல்கள்


நாளை நமதே- சோலார் பேனல்கள்
x

வீடுகளுக்கு சோலார் பேனல்களை அமைப்பதை பற்றி யோசிக்கும் பொழுது அதற்காக நாம் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் மற்றும் அதனை அமைப்பதால் எவ்வளவு சேமிப்போம் என்பது குறித்தும் அறிந்து கொள்ள விரும்புவோம் அல்லவா.

சூரிய ஆற்றலை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இதுபோன்ற சோலார் பேனல்கள் இந்தியாவில் தற்போது பெருமளவில் பிரபலம் அடைந்து வருகிறது.முன்பைவிட அனைவரும் வாங்கக்கூடிய விலையிலும், வீட்டில் சோலார் பேனல்களை நிறுவுவதால் கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்து மக்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதாலும், வரும் காலங்களில் கட்டாயம் மின்சார தேவை என்பது மிகவும் தட்டுப்பாடு நிறைந்ததாக இருக்கும் அதே சமயத்தில் மின்சாரக் கட்டணமும் உயர்ந்து கொண்டே போகும் போன்ற பலவித காரணங்களால் மக்கள் இதுபோன்ற சோலார் பேனல்களை நோக்கி படையெடுக்கத் துவங்கிவிட்டனர். இதையெல்லாம்விட சோலார் பேனல்களை அமைப்பவர்களுக்கு அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட மானியத்தையும் வழங்குகிறது.

இந்தியாவில் கிடைக்கக்கூடிய நான்கு முக்கிய சோலார் பேனல்கள்:

மோனோகிரிஸ்டலின், பாலிகிரிஸ்டலின்,பி இ ஆர் சி மற்றும் தின் ஃபிலிம் பேனல்கள்.

சூரிய ஆற்றலின் நன்மைகள்

1. புதுப்பிக்கத்தக்கது - சூரிய ஆற்றல் என்பது புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மிகவும் பயனுள்ள ஆதாரங்களில் ஒன்றாகும்,ஏனெனில் சூரியனிலிருந்து உலகம் மிகவும் நம்பகமான அளவு வெப்பத்தை பெறுகின்றது. அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், இந்த மூலத்தை சிறந்த, எளிதான மற்றும் மலிவான வழிகளில் பயன்படுத்துவதைத் தொடர்ந்து சூரிய சக்தியை வேகமாக வளர்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரமாக மாற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

2. சுத்தமானது - சோலார் பேனல்களின் கார்பன் தடம் பிவி (ஃபோட்டோவோல்டாயிக்) ஏற்கனவே மிகவும் சிறியதாக உள்ளது, மேலும் அவற்றில் பயன்படுத்தப்படும் பொருட்கள் பெருகிய முறையில் மறுசுழற்சிசெய்யப்படுவதால், அது தொடர்ந்து சுருங்குகிறது.

3. பண சேமிப்பு - நம் வீட்டிலேயே மின்சாரமானது உற்பத்திசெய்து பயன்படுத்தப்படுவதால் நம்முடைய மின்சாரக் கட்டணங்கள் பெருமளவில் குறைந்து நமக்கு பண சேமிப்பை தருகின்றது.

4. அனுமதி தேவையில்லை - சோலார் பேனல்கள் 'அனுமதிக்கப்பட்ட மேம்பாடு' எனக் கருதப்படுவதால்,நம் வீடுகளில் நிறுவுவதற்கு யாரிடமும் அனுமதி பெற்று அமைக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

5. குறைந்த பராமரிப்பு - சோலார் பேனல்களை நிறுவிய பிறகு அவற்றிற்கு மிகக் குறைந்த அளவிலேயே பராமரிப்பு தேவைப்படுகிறது. மழைநீர் சுதந்திரமாக ஓடுவதுபோல் பொதுவாக ஒரு கோணத்தில் நிறுவப்பட்டுள்ளதால், இதில் எந்தவிதமான அழுக்கு மற்றும் தூசியும் படிவதற்கு வாய்ப்பு என்பதே இல்லை.இவற்றையெல்லாம் மீறி அழுக்குகள் படிந்து சோலார் பேனல்களின் செயல்திறனை குறைத்தாலும் அவை 25 ஆண்டுகள் வரை சிறிய இழப்புகளுடன் நீடித்து உழைக்கக்கூடிய வையாக செயல்படும்.

6. சுதந்திரமாக செயல்படுபவை - சோலார் பேனல்களை நிறுவுவதால் ஆற்றல் ஜெனரேட்டராக, நீங்கள் நாள் முழுவதும் மலிவான மின்சாரத்தை அனுபவிக்க முடியும்.அதைப்போல் பேட்டரியை பயன்படுத்தி நிறுவப்படும் சோலார் பேனல்களில் முதலீடு செய்தால், சூரியன் மறைந்த பிறகும் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரத்தைப் பெற முடியும்.

7. திறமையானவை - சோலார் பேனல்களை அமைப்பதன் மூலம் ஆற்றலை உருவாக்கும் மிகவும் திறமையான வழிக்கு நாம் பங்கையளிக்கிறோம்.சாதாரண மின்சாரத்தை உபயோகிக்கும் பொழுது தவிர்க்க முடியாமல் பல நேரங்களில் ஆற்றல் இழப்பை எதிர்கொள்ள வேண்டி இருக்கின்றது. அதே நேரத்தில் சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்தும் போது மின்சார இழப்பு குறைக்கப்படுவதுடன் குறைந்த ஆற்றல் வீணாகிறது.

8. இருட்டிய பிறகும் சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்த முடியும் - சோலார் பேட்டரி சேமிப்பகத்தில் முதலீடு செய்வதன் மூலம் இரவு பகல் என எந்த நேரத்திலும் மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

9. பிராப்பர்டி வேல்யூ - சோலார் பேனல்களை நிறுவுவது நம் வீட்டிற்காக செய்யக்கூடிய நல்ல முதலீடுகளில் ஒன்று என்று கூறமுடியும். சோலார் பேனல்களுடன் இருக்கும் வீடுகளின் சந்தை மதிப்பு எதிர்காலத்தில் கூடுமே தவிர குறையாது.

சோலார் பேனல்கள் எப்படி வேலை செய்கின்றன?

சூரிய ஒளி மின்னழுத்த அமைப்பு (PV) சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுகிறது. சூரிய ஒளி சோலார் பேனல்களால் பிடிக்கப்பட்டு இன்வெர்ட்டர் மூலம் பயன்படுத்தக்கூடிய மின்சாரமாக மாற்றப்படுகிறது.இது உங்கள் வீட்டில் உள்ள உபகரணங்களை நேரடியாகப் பயன்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படலாம் அல்லது சூரியன் பிரகாசிக்காதபோது பயன்படுத்துவதற்காக பேட்டரியில் சேமிக்கப்படும்.மின்சாரம் பயன்படுத்தப்படாவிட்டால் அல்லது சேமிக்கப்படாவிட்டால், அதிகப்படியான மின்சாரம் மீண்டும் க்ரிட்டிற்கு அனுப்பப்படும்.

சோலார் பேனல்களை நிறுவுவதற்கு முன் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

1.மேகமூட்டமான ஊர்களில் சோலார் பேனல்களை பயன்படுத்துபவரா நீங்கள் ?

சூரிய சக்தியை உருவாக்க நாள் முழுவதும் சூரிய ஒளி உள்ள பகுதியில் வாழ வேண்டிய அவசியமில்லை. சோலார் பேனல்கள் மேகங்கள் வழியாகக் கூட சூரிய சக்தியைப் பெறுகின்றன.இருப்பினும், எவ்வளவு சூரிய ஒளியை சோலார் பேனல்கள் பெறுகின்றனவோ, அவ்வளவு சக்தியை உருவாக்குகின்றன.

2. தெற்கு நோக்கிய ரூஃப் வேண்டும்

சோலார் பேனல்களை அமைக்க தெற்கு அல்லது தென்மேற்கு திசையை எதிர்கொள்ளும் ரூஃப் இருக்க வேண்டும்.சமீபத்திய தொழில்நுட்பத்தின் மூலம் பெரும்பாலான வீடுகள் சோலார் பிவி மூலம் பயனடைகின்றன. எப்பொழுதும் வடக்கு நோக்கிய ரூஃப் சோலார் பேனல்கள் அமைப்பதற்கு பொருத்தமானவை அல்ல என்பதை அறிந்திருப்பது அவசியம்.

3. திட்டமிடல் அனுமதி தேவையில்லை

பெரும்பாலான வீடுகளுக்கு சோலார் பேனல்களை நிறுவ திட்டமிடல் அனுமதி தேவையில்லை என்பது நல்ல செய்தியாகும். இருப்பினும், நீங்கள் ஒரு தட்டையான ரூஃப் வைத்திருந்தால் அல்லது ஒரு பாதுகாப்புப் பகுதியில் வசிப்பவராக இருந்தால்,உள்ளூரில் இருக்கும் கவுன்சிலில் விசாரித்து பின்பு சோலார் பேனல்களை அமைத்துக்கொள்ளலாம்.

4.அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் மானியத்தை சோலார் பேனல்களை பொருத்தித் தருபவரே நமக்கு பெற்றுத் தருவாரா என்பது குறித்து அவர்களிடம் கேட்கலாம்.


Next Story