சிமெண்ட்டில் இத்தனை வகைகளா
கட்டிடம் கட்டுவதற்கு சிமெண்ட் இன்றியமையாத ஒன்றாகும். சிமெண்ட் கட்டிடம் எழுப்புவதற்கும், பூச்சுக்காகவும், நடைபாதைகள் சாலைகள் காங்கிரீட் போன்ற அனைத்து கட்டட வேலைகளுக்கும் மிகவும் அவசியம்.
சிமிண்ட் அர்ஜுலேசியஸ் சுண்ணாம்பு பொருட்கள் மற்றும் ஜிப்சம் பொருட்கள் கலந்த கலவை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதற்கும் தரக்குறியீடுகள் தரத்தைப் பொறுத்து வழங்கப்படுகிறது. இதன் சுருக்க வலிமையின் தன்மையை பொறுத்து தரங்கள் குறியீடுப்படுகிறது.
இதன் அளவீடுகள் 28 நாட்களுக்கு பிறகு மெகா பாஸ்கல் (எம்பிஏ) அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்தியாவில் பல வகையான சிமெண்ட்கள் உபயோகிக்கப்படுகிறது. பெரும்பாலும் போர்ட் லேண்ட் சிமெண்ட் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்தியாவில் ஓ பி சி 33 கிரேடு 43 மற்றும் 53 கிரேடு என்று மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஓ பி சி 33 சிமெண்ட்:-
சாதாரண போர்ட்லாண்ட் சிமெண்ட் தான் 33 கிரேடு தரவரிசையில் உள்ளது. இவ்வகை கிரேடுகள் தரை மற்றும் கொத்து வேலைகளுக்கும் கட்டுமான பணிகளுக்கும் பெரும்பாலும் உபயோகப்படுகிறது. இவ்வகை சிமெண்ட் குறைந்த அழுத்த வலிமை கொண்டதாகவும் வெப்ப நீரோட்டம் உள்ளடங்கியதாகவும் உள்ளது. இவ்வகை சிமெண்ட் விரிசல்கள் அதிகம் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கிறது. இவ்வகை சிமெண்ட்கள் தற்போது கிடைப்பது அரிதாக உள்ளது. இதற்கு தரவரிசைப்படி 269 என்று குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
ஓ பி சி 43 சிமெண்ட் :-
இவ்வகை சிமெண்ட்களும் தரை மற்றும் கான்கிரீட் சார்ந்த கட்டுமான பணிகளுக்கும் பெரும்பாலும் பயன்படுகிறது. இவ்வகை சிமெண்ட்கள் 28 நாட்களில் 43 மெகா பாஸ்கலில் சுருக்க வலிமையை அடைகிறது. இவ்வகையான சிமெண்ட் கட்டுமான பணிகளுக்கு அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. இது சந்தையில் பெருமளவில் அதிகமாக எளிதாக கிடைக்கிறது. இதன் தரக் குறியீடு 8112.
ஓ பி சி 53 சிமெண்ட்:-
இவ்வகை சிமெண்ட் பொதுப்பணித்துறைகளின் வேலைகளான சாலைகள் பாலங்கள் நடைபாதைகள் போன்றவற்றுக்கு பெருமளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகள் அதிக வலிமை கொண்டதால் பெரும்பாலும் பல அடுக்குமாடி கட்டிடங்களில் கான்கிரீட் போடுவதற்கு பயன்படுகிறது. M 30 வகைகளை விட அதிக அளவில் இவ்வகை கிரேடுகள் பயன்பாட்டில் உள்ளது. 53 மெகா பாஸ்களில் 28 நாட்களில் இறுகும் தன்மையையும் கொண்டுள்ளது. இது அதிக இழுவிசை தன்மை கொண்டதாகவும், வலிமை கொண்டதாகவும் உள்ளதால் கான்கிரீட் போன்ற உறுதியான இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இவைகள் சிமெண்ட் கூழ்கள் மற்றும் ப்ளக்கிங் மோட்டார்களிலும் பயன்படுகிறது. இதன் இந்திய தரக்குறியீடு 12269 என்று வழங்கப்பட்டுள்ளது.
போர்ட்லாண்ட் ஸ்லாக் சிமெண்ட் ( PSC) :-
இவ்வகை சிமெண்ட் கடல் அரிப்புகள் கடல் பயன்பாடுகள் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற இடங்களில் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. இவ்வகை ஸ்லாக் சிமெண்ட் சாதாரண போர்ட்லாண்ட் சிமெண்ட் உடன் சேர்க்கப்படுவதால் வலிமை மிகுந்து விரிசல்கள் ஏற்படுவதை தடுக்கிறது. இது அதிக அளவில் கடல் சார்ந்த இடங்களில் பயன்பாட்டில் உள்ளது.
நீண்ட நாள் உழைக்கும் பாலங்கள் சாலைகள் போன்ற இடங்களிலும் இவ்வகை சிமெண்ட் பயன்படுகிறது. இவ்வகை சிமெண்ட் அதிக வலிமை வாய்ந்ததால் ஊடுருவளை தவிர்க்கிறது. குளோரைடு மற்றும் சல்பேட் தாதுக்களால் ஏற்படும் பாதிப்புகளையும் எளிய அரிப்புகள் போன்ற ரசாயன பாதிப்புகளில் இருந்தும் கட்டடங்களை பாதுகாக்கிறது. இவ்வகை சிமெண்ட்கள் அதிக வலிமை வாய்ந்ததால் சில குறிப்பிட்ட சந்தைகளில் மட்டுமே கிடைக்கிறது. இதன் இந்திய தர குறியீடு 455 ஆகும்.
வெள்ளை நிற சிமெண்ட் :-
இவ்வகைகள் சாம்பல் நிற கலரில் இல்லாமல் வெள்ளை நிறத்தில் இருக்கும். விலை சற்று அதிகமாக இருந்தாலும் பயன்பாடுகளும் அதிக அளவில் உள்ளது. இது அயர்ன் ஆக்சைடு மற்றும் மாங்கனீஸ் ஆக்சைடு போன்ற மூலப் பொருட்களால் ஆனது.
டெரஸ்ஸோ ஓடுகள் மற்றும் அலங்கார சிலைகள் செய்வதற்கு பயன்படுகிறது. அலங்கார கான்கிரீட் செய்வதற்கும் தரைகளின் மற்றும் சுவர்களின் உட்புற மற்றும் வெளிப்புற அலங்கார பூச்சுக்களுக்கும் பயன்படுகிறது. இதுவும் மற்ற சிமெண்ட் வகைகளைப் போலவே வேதியியல் இயற்பியல் மாற்ற பண்புகள் கொண்டதாகவே உள்ளது இது அழகு சார்ந்த பூச்சு வேலைகளுக்கு பயன்படுகிறது. வண்ண சிமெண்ட் என்பதால் இதன் தரக்குறியீடு 8042 ஆகும்.
போசோலானா சிமெண்ட் (PPC ):-
இவ்வகை சிமெண்ட் அதிக ஊடுருவல்களை தடுத்து நிறுத்தும் தன்மை கொண்டது. இவ்வகை சிமெண்டும் அதிக வலிமை கொண்டு இருப்பதால் கான்கிரீட் நீண்ட நாள் உழைக்கும் கடல் சார்ந்த இடங்களில் அதிகமாக பயன்பாட்டில் உள்ளது. அணைகள் தடுப்பு சுவர்கள் போன்ற ஹைட்ராலிக் கட்டட அமைப்புகளுக்கு பெருமளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. இது எளிதாக அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. இதன் இந்திய தரக் குறியீடு குறியீடு 1489 பி-2 ஆகும்.
ஹைட்ரோபோபிக் சிமெண்ட்:-
இது மற்ற சிமெண்ட் வகைகளை விட விலை அதிகம் அதனால் எளிதாக சந்தையில் கிடைப்பதில்லை. இது ஈரப்பதத்தை குறைக்கும். ஆதலால் இது மழைப்பொழிவு அதிகமாக உள்ள இடங்களிலும் குளிர் பிரதேசங்களிலும் அதிக அளவில் பயன்படுகிறது. கடலுக்கு அடியில் கட்டும் அணைகள் தடுப்பு சுவர்கள் போன்ற நீர் கடியில் இருக்கும் கட்டுமான பணிகளுக்கு பெரும்பாலும் இவ்வகை சிமெண்ட் உபயோகப்படுத்தப்படுகிறது.
தண்ணீர் தொட்டிகள் தண்ணீர் கசியும் இடங்கள் போன்றவைகளில் இதன் பயன்பாடு அதிகம். இது ரசாயன கனிமங்கள் கலந்து இருப்பதால் நீரை உள்ளே அண்ட விடாமல் கசிவுகளை தவிர்க்கிறது. இதன் இந்திய தர குறியீடு 8043 ஆகும்.
இடத்திற்கு ஏற்ப தேவையான சிமெண்ட் வகைகளை கட்டுமான நிபுணர்களிடம் கலந்து ஆலோசித்து உபயோகப்படுத்தினால் கட்டடங்களும் உறுதியாக நீண்ட ஆயுளைக் கொண்டதாகவும் தரமானதாகவும் இருக்கும்.