கட்டுமானத்துறையில் புதிய தொழில்நுட்பம் - ட்ரைவால்


கட்டுமானத்துறையில் புதிய தொழில்நுட்பம் - ட்ரைவால்
x

ட்ரைவால், அதாவது உலர்ந்த சுவர் என்பது இன்றைய கட்டுமான துறையில் உபயோகப்படுத்தப்படும் ஒரு புதிய தொழில்நுட்பம் ஆகும். ட்ரைவால் என்பது செயற்கையாய் தயாரிக்கப்படும் ஒரு சுவர் என்று கூறலாம். இது எடை குறைவான ஒரு தடுப்பு சுவர் ஆகும். இது ஸ்டீல் ஃப்ரேமில் ஜிப்சம் பிளாஸ்டர் போர்டுகள் பொருத்தப்பட்டு வருகின்றன. ஒரு ஜிஐ(GI) ஸ்டீல் பிரேமிற்கு இருபுறமும் ஜிப்சம் பிளாஸ்டர் போர்ட் பொருத்தப்பட்டு அதில் ஒன்றுடன் ஒன்று இணைக்க கூடிய ஸ்க்ரூக்களுடன் வருகிறது. இந்த இணைப்புகள் ஒன்றோடு ஒன்று ஒட்டப்பட்டு ஜிப்சம் ஜாயிண்டிங் காம்பவுண்ட் என்ற பொருளின் மூலம் இணைக்கப்படுகிறது.

ட்ரைவாலின் பலன்கள்

கொத்தனார் வைத்து செங்கல் சிமென்ட் கொண்டு கட்டப்படும் சுவற்றை விட மூன்று முதல் நான்கு மடங்கு இதை வேகமாக கட்ட முடியும்.

இந்த சுவற்றை அமைக்கும் பொழுது சிமெண்ட் தூசியோ கலவையின் கரையோ இன்றி வேலை செய்யும் இடம் சுத்தமாக இருக்கும்.

இதன் எடை 8 முதல் 10 மடங்கு சாதாரண சுவற்றை விட குறைவானதாக இருப்பதால் அதிக மனித உழைப்பு தேவைப்படுவதில்லை.

இந்த போர்டுகளை தடுப்புச் சுவராக வீட்டின் உள்ளே பொருத்தும் பொழுது நமக்கு தேவையான அளவிற்கு இதை வைத்துக் கொள்ளலாம், இடமாற்றியும் வைத்துக் கொள்ளலாம்.

இந்த ட்ரைவால் எந்தவிதமான பிசுறுகளோ ஏற்ற இறக்கங்களோ இல்லாமல் வழுவழுப்பாகவும் ஒரே சீராகவும் எந்த விதமான வெடிப்புகளோ மடிப்புகளோ இல்லாமல் சமமாக இருப்பதால் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் இருக்கிறது.

இந்த ட்ரைவால் தீயினால் எரிக்கப்படும் அபாயம் அற்றதாகவும் இருக்கிறது. மேலும் இது சத்தத்தை வெளிவிடாத அமைப்பு கொண்டதாக இருப்பதால் ஒரு அறைக்கும் மற்றொரு அரைக்கும் இடையே சத்தங்கள் கேட்பதில்லை. இந்த ட்ரைவால் வீட்டின் உட்புறத்தில் எங்கு வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம்.

இதை வணிக வளாகங்களிலும், கடைகளிலும், அலுவலகங்களிலும் தடுப்புச் சுவராக அமைப்பது மிகவும் எளிது.

இந்த ட்ரைவால் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பதோடு அல்லாமல் இதை மறுசுழற்சி செய்து கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

ட்ரைவால் மற்றும் செங்கல் சுவருக்கும் உள்ள வித்தியாசம்..

டிரைவாலை ஒரு நாளில் 40 முதல் 50 மீட்டர் ஸ்கொயர் அளவு கட்டிவிட முடியும். ஆனால் செங்கல் சுவர் ஒரு நாளைக்கு பத்து மீட்டர் ஸ்கொயர் மட்டுமே கட்ட முடியும்.

ட்ரைவால் அமைப்பதால் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

ட்ரைவால் ஒரு சதுர மீட்டருக்கு 19 கிலோ எடை உள்ளது. ஆனால் செங்கல் சுவர் ஒரு சதுர மீட்டருக்கு 230 கிலோ கிராம் எடை உள்ளது.

தண்ணீர் உள்ள இடங்களிலும் இந்த சுவரை அமைக்கலாம்.

செங்கல் சுவர் போல இல்லாமல் இதன் வெளிப்புறத் தோற்றம் விரிசல் இன்றி வழுவழுப்பாக இருக்கிறது. ஆனால் செங்கல்சுவர் பிசிறுகளும் விரிசல்களும் மடிப்புகளும் கொண்டதாகவே இருக்கும்.

ட்ரைவாலில் 65 டெசிபல் சத்தம் வெளியிடப்பட முடியாமல் இருக்கும் ஆனால் செங்கல் சுவரில் 35 முதல் 40 டெசிபல் வரைக்கும்தான் இன்சுலேஷன் கிடைக்கும்.

ட்ரைவால் சூட்டை உறிந்து கொள்ளும் தன்மையில் செங்கல் சுவரை விட குறைவாகவே இருக்கிறது.

இந்த ட்ரைவாலை நாம் வெளிப்புற சுவற்றுக்கு உட்புறங்களில் செங்கல் சுவற்றுக்கு உட்புறங்களில் அமைக்கலாம். இதை அலுவலக வளாகங்களிலும் வணிக வளாகங்களிலும் தடுப்பு பகுதியாக அமைப்பதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது.

பெருமளவில் இதை சுலபமாக நிர்மாணிக்க முடியும்.

ஹோட்டல்கள் ஹாஸ்பிடல் வீடுகள் சினிமா தியேட்டர்கள் மற்றும் உற்பத்திக் கூடங்களிலும் இந்த ட்ரைவால் உபயோகப்படுத்தப்படுகிறது.


Next Story