இரும்பு துரு பிடிக்காமல் பாதுகாக்கும் வழிமுறைகள்


இரும்பு துரு பிடிக்காமல் பாதுகாக்கும் வழிமுறைகள்
x

இரும்பு மற்றும் எஃகு பொருட்கள் துருப்பிடிக்காமல் இருப்பதற்கு பல வழிமுறைகளை கடைபிடிக்கின்றனர்.

கட்டுமான பணிகளில் இரும்பு மற்றும் உலோக பொருள்களும் அதன் பாதுகாப்பும் தன்மையும் முக்கியமான ஒன்றாகும். இரும்பு போன்ற உலோகங்கள் என்றாலே துருப்பிடிக்கும் என்பது இயற்கையான ஒன்று. துருப்பிடித்தல் என்பது அதிக வேதியல் ரீதியான ஆக்சைடாக மாற்றும் ஒரு இயற்கையான செயல்பாடு முறையே ஆகும்.

பல கட்டமைப்பு உலோக கலவைகள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை வெளிப்படுத்துவதால் மட்டுமே அரிக்கிறது. நீர் மற்றும் ஆக்சிஜன் (காற்று) படும் பொழுது இரும்பின் நிறம் மாறுபட்டு பழுப்பு ஆரஞ்சு நிறத்தில் தென்படும். கடலின் உப்பு காற்றும் மற்றும் உப்பு கலந்த நீர் படும் பொழுதும் இரும்பின் துருப்பிடித்தல் தன்மை அதிகப்படுகிறது.

வீடுகளில் உபயோகிக்கும் இரும்பு உலோகங்கள் எஃகு பொருட்கள் அனைத்தும் நாளடைவில் துரு பிடிக்க ஆரம்பிக்கிறது. கார்பன் மற்றும் சல்பர் டை ஆக்சைடும் துருப்பிடிப்பதற்கு ஒரு காரணமாகும். இரும்பு மற்றும் எஃகு பொருட்கள் துருப்பிடிக்காமல் இருப்பதற்கு பல வழிமுறைகளை கடைபிடிக்கின்றனர் .

ட்ரை கோட்டிங் :- இந்த உலர் பூச்சு இரும்பின் மேல் பூசப்படுகிறது.இந்த ட்ரைகோட்டிங் இரும்பை துருப்பிடிக்காமல் பாதுகாக்கிறது. இவ்விதமான பூச்சுகள் அனைத்து சந்தைகளிலும் கிடைக்கிறது.

கால்வினைசிங் :- இதுவும் இரும்பை பாதுகாத்துக் கொள்ளும் ஒரு உலர் போச்சு தான். எலக்ட்ரோ பிளேட்டிங் அல்லது ஹாட் டிப்பிங் போன்று இரும்பை துத்தநாக கவசமாக துருப்பிடிக்காமல் பாதுகாக்கிறது. துத்தநாகம் வினைத்திறன் அதிகமாக கொண்டு உள்ளதால் துருப்பிடிப்பதிலிருந்து எளிதில் இரும்பை பாதுகாக்கிறது.

கால்வனக் உப்பு நீர் கலந்த இடங்களில் உள்ள குழாய்கள் மற்றும் கடல் அமைப்பு சார்ந்த தொழில் கட்டட அமைப்புகளுக்கு பயன்படுகிறது.

ஃபுலிங் இதுவும் ஒரு வகை உலர் பூச்சாகும். பொட்டாசியம் நைட்ரேட் , சோடியம் ஹைட்ராக்சைடு மற்றும் நீர் கலந்த ஒரு கலவையாகும். இதை இரும்பின் வெளிப்புறத்தில் பூசுவதால் உப்பு கலந்த நீரினால் ஏற்படும் காற்றினால் உருவாகும் அரிப்பு தன்மையிலிருந்து சிறிதளவு பாதுகாக்கிறது.

போஸ் பிரைமர் :- இந்த கலவை பாஸ்போரிக் அமிலம் உடன் கலந்த ஒரு தனித்துவமான திரவமாகும் . இது நீண்ட நாட்களுக்கு உழைக்கிறது. இக்கலவையை இரும்பு மற்றும் உலோகங்களின் மேல் பூசுவதால் அரிப்பு தன்மையை எளிதில் அண்ட விடாமல் பாதுகாக்கிறது. அப்படி துருப்பிடித்து இருந்தாலும் இந்த கரைசலை கொண்டு சுத்தம் செய்வதால் நீண்ட நாட்களுக்கு எதிர்காலத்தில் துருப்பிடிக்காத வண்ணமும் பாதுகாக்கிறது .

எண்ணெய் வகைகள்:- பண்டைய காலம் முதலே வீடுகளில் உபயோகிக்கும் பூட்டு சாவி மற்றும் கதவில் உள்ள கொண்டிகள் போன்ற இரும்பு சாதனங்கள் வேலை செய்ய பயன்படுத்தப்பட்டது. துருப்பிடித்தாலும் எண்ணெய் வகைகளைக் கொண்டு துடைத்து அவைகளை ஒழுங்காக வேலை செய்யும் விதத்தில் துருப்பிடிக்காமல் பாதுகாக்கிறது. இன்று நான் பலவிதமான எண்ணெய் வகைகள் சந்தைகளில் பயன்பாட்டில் உள்ளது

பெயிண்டிங் இரும்பு மற்றும் எஃகு உலோகப் பொருட்கள் துருப்பிடிக்காமல் இருப்பதற்கு உபயோகிக்கப்படுகிறது. வண்ண பூச்சுகள் அடிப்பதும் ஒரு விதமான பாதுகாப்பு ஆகும். அழகழகாக இரும்பு உலோகங்களின் மீது பெயிண்டிங் பண்ணுவதால் துருப்பிடிப்பதை தவிர்க்கலாம்.

பவுடர் கோட்டிங்:- இது பவுடர் வகையை சார்ந்தது. இது பாலிஸ்டர் மட்டும் அகரலிக் போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த பவுடர் உலர்ந்த மற்றும் வறண்ட தன்மையுடையதால் ஈரத்தை ஈர்த்து இரும்பை பாதுகாக்கிறது.

இன்றைய காலகட்டங்களில் பலவிதமான ஸ்ப்ரே போன்ற சாதனங்களும் தடுப்பான்கள் உலோகங்களின் மேற்பரப்பில் அடிக்கப்பட்டு துருப்பிடிப்பதை தடுக்க பயன்படுத்துகிறார்கள்.

பயோ ஃபிலிம் பூச்சுகள் உலோகங்களின் மேல் படரும் சில வகையான பாக்டீரியாக்களை தடுக்கும் தன்மை கொண்டது. இவ்வகை பூச்சுக்களும் பல கட்டட அமைப்புகளில் பயன்பாட்டில் உள்ளது.

கடல் சார்ந்த பகுதிகளிலும் கப்பல் போன்ற இடங்களிலும் உள்ள இரும்பு மற்றும் எஃகு போன்ற உலோகங்களை பாதுகாக்க கத்தோட்டிக் முறையும் பயன்படுத்தப்படுகிறது. கத்தோட்டிக் முறை என்பது உலோகம் மேற்பரப்பில் உள்ள அரிப்பை கட்டுப்படுத்தும் ஒரு பாதுகாப்பு முறை ஆகும். பெரிய கட்டிட அமைப்புகளுக்கு கால்வனிக் அனோட்டுக்கள் அரிப்பு சக்தியை குறைத்து கட்டுமான உலோகப் பொருட்களுக்கு பொருளாதார ரீதியாக பாதுகாப்பு வழங்குகிறது.


Next Story