மின்சார பயன்பாட்டை கணக்கிடும் கருவி


மின்சார பயன்பாட்டை கணக்கிடும்  கருவி
x
தினத்தந்தி 28 April 2018 5:15 AM IST (Updated: 27 April 2018 4:27 PM IST)
t-max-icont-min-icon

குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் மொத்த மின்சார பயன்பாட்டு அளவை அறிந்து கொள்ள எலக்ட்ரிகல் மின் மீட்டர் பயன்படுகிறது.

ஒவ்வொரு உபகரணமும் தனித்தனியே எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்துகிறது என்பதை அறிந்து கொள்வதற்கு ஒரு கருவி இருக்கிறது.

மின் பயன்பாட்டு அளவை அளக்க மட்டுமல்லாமல், பல்வேறு பயன்பாடுகளுடன் சந்தையில் கிடைக்க இருக்கிறது. அதன் பெயர் ‘ஸ்மார்ட் எனர்ஜி மானிட்டர்’. எலக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகே‌ஷன் முறையில் வடிவமைக்கப்பட்ட இதிலுள்ள ஹப், ஐந்து முதல் ஏழு பிளக் பாயிண்டுகள் கொண்டதாகும்.

‘ஸ்மார்ட் எனர்ஜி’ கருவி

வீட்டின் ஒயரிங் பெட்டியான எம்.சி.பி (மினியேச்சர் சர்க்யூட் பிரேக்கர்) உடன், ஹப் மற்றும் அதன் பின் பகுதியில் உள்ள பிளக் பாயிண்ட்களும், பிளக்குகளும் இணைக்கப்படும். ஏசி, குளிர் சாதன பெட்டி, வாசிங் மெஷின் என ஒவ்வொரு இயந்திரத்தின் பிளக் பாயிண்டும் ஸ்மார்ட் எனர்ஜி கருவியோடு இணைக்கப்படுகின்றன.

மேற்கண்ட, அமைப்பின் மூலம் மொத்த மின்னோட்ட அளவு என்ன என்பதை ‘ஹப்’ கணக்கிடுகிறது. ஒவ்வொரு உபகரணமும் எவ்வளவு மின்சாரத்தை செலவழிக்கிறது என்ற வி‌ஷயங்கள் ‘ஸ்மார்ட் எனர்ஜி மானிட்டர்’ கருவியின் திரையில் தெரியும்.

எங்கிருந்தும் இயக்கலாம்

ஸ்மார்ட் எனர்ஜி கருவியை கட்டுப்படுத்துவதற்கும், ஆன் மற்றும் ஆப் செய்வதற்கும் சுலபமான வசதிகள் உள்ளன. இந்த கருவியை வீடுகளில் டி.வி, ஹீட்டர் போன்ற மின்சாதனங்களிலும் இணைத்து பயன்படுத்த இயலும். ‘யுனிக் டிவைஸ் கன்ட்ரோல்’ மூலம் எந்த ஒரு இடத்திலிருந்தும் வீட்டில் உள்ள எலக்ட்ரானிக் சாதனங்களை இயக்க முடியும்.

உதாரணமாக, பிராட்பேண்ட் மூலம் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போனுக்கும், ஹப்பிற்கும் தொடர்பு கொண்டு, வெளியிடங்களில் இருந்தும் இன்டர்நெட் தொடர்போடு, ஹப் மூலம் வீட்டில் உள்ள ஏசி, டிவி உள்ளிட்ட பொருட்களை இயக்கவோ அல்லது நிறுத்தவோ முடியும். அதன் மூலம் மின்சார விரயங்களை தவிர்க்க இயலும். இவ்வகை ‘ஸ்மார்ட் எனர்ஜி மானிட்டர்’ தற்போது உபயோகத்தில் இருந்து வருகிறது.

Next Story