வார ராசி பலன்: 28.4.2024 முதல் 4.5.2024 வரை
மகர ராசிக்காரர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த வெளிநாட்டு வர்த்தகம் அல்லது வேலைவாய்ப்பு குறித்த சாதகமான தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள்.
வார ராசி பலன்:
மேஷம்
இந்த வாரம் தன வரவு, பொருள் வரவு, அமைதிக்கு பஞ்சமில்லை. சிலருக்கு கௌரவப்பட்டமும், விருதுகளும் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. தொழிலாளர்கள், வியாபாரிகள் வீண் அலைச்சல்களைச் சந்தித்தாலும், நஷ்டங்கள் ஏற்படும் வாய்ப்பு குறைவு. நீண்ட நாட்களாக வேலை நிமித்தமாக பிரிந்திருந்த தம்பதிகள் தாங்கள் விரும்பிய இடம் மாற்றத்தினால் அவர்கள் ஒன்று சேர்வர். சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமையும் பாக்கியம் உண்டு. பெண்கள் தாங்கள் விரும்பிய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்
பணவரவுக்கு ஏற்ற செலவுகளும் இருக்கும். தொழிலில் மேன்மை, புகழ் நன்மதிப்பு கிட்டும். சிலருக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் உண்டு. வார ஆரம்பத்தில் முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். வார இறுதியில் பிரகாசமான வாய்ப்புகள் உண்டு. வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நிதானத்துடன் செயல்படுவதால் பின்னடைவை சந்திப்பதைத் தவிர்க்கலாம். தொழிலாளர்கள் சக தொழிலாளர்களுடன் இணக்கமான போக்குடன் இருப்பது நல்லது. சிலர் தங்க ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.. பொருட்கள் இழப்பைத் தவிர்க்க பயணங்களை ஒரிரு நாட்கள் தள்ளிப்போடலாம்.
மிதுனம்
கடந்த சில தினங்களாக இருந்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி சுறுசுறுப்புடன் இயங்கும் வாரம் இது. செய்யும் தொழிலில் எதிர்பார்க்கும் லாபம். வாரத்தின் முதல் இரண்டு நாட்களில் புதிய ஒப்பந்தங்களால் மேன்மையும் உண்டாகும் வாய்ப்புகள். தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் பிரச்சனைகளை ஏற்படுத்தினாலும், உங்கள் திறமையான பேச்சினால், முறியடித்து வெற்றி காண்பீர்கள். பெண்கள் சிலர் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வாரத்தின் முற்பகுதியில் ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள்.
கடகம்
எதிர்ப்புகள் மறைந்து எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும் வாய்ப்புகள் உண்டு. பணியாளர்களுக்கு வேலை பளு அதிகரிக்கக் கூடும். நடுத்தர வயதினருக்கு நல்ல வேலை மாற்றம் ஏற்படும். அதனால் ஊதிய உயர்வும், நன்மதிப்பும் கிட்டும். தொழில்நுட்ப வல்லுனர்கள் சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உடனடியாக உருவாகும். மருத்துவத்துறையினர் சிலருக்கு அரசு விருதுகள் கிடைக்கும். சிலருக்கு வயிற்று உபாதைகள் ஏற்படக்கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடும், கவனமும் தேவை. பெண்கள் சிலர் கூடுதல் பொறுப்புகள் சுமக்க வேண்டி இருக்கும்.
சிம்மம்
பகைவர்களையும் நண்பராக்கும் வாரம் இது. அதனால் பல நல்ல விஷயங்களை சாதித்துக் கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும். விரோதம் நீங்கி வீண் செலவுகள் இல்லாமல் போகும். துன்பம் நீங்கி, கவலைகள் மறைய துர்க்கையை வழிபடுங்கள். ஞாபகமறதிக்கு இடம் கொடுக்காதீர்கள். புதிய ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள். உற்றார், உறவினரிடமிருந்து அனுகூலமான செய்திகள் வந்து சேரும். ஆரோக்கியம் சிறந்து மனதில் மகிழ்ச்சி பொங்கும். இந்த வாரம் முழுவதும் பிறர் நலனில் அக்கறை செலுத்துங்கள். உங்கள் நலன் தானே பெருகும்.
கன்னி
சோம்பலை ஒழித்து சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய வாரம் இது. மறதி என்பதை மறந்து செயல்படுவீர்கள். தொலைதூரச் செய்தி ஒன்று தங்களுக்கு சாதகமாக இருக்கும். நீண்டதூரப் பயணம் செல்ல நேரிடும் சிலருக்கு வெளிநாட்டு பயணம் அல்லது வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அமையக்கூடும். நீண்ட நாட்களாக வெளிநாடு செல்ல விசா கிடைக்காமல் இருந்தவர்களுக்கு ஒரு முடிவு தெரிய வரும். தனவரவு செய்தொழிலில் லாபம் உண்டு. இந்த வாரம் திருமண பேச்சு கைகூடும் நேரம் இது. மங்கலகரமான வாரமாக இந்த வாரம் அமையும்.
துலாம்
சிலருக்கு கடந்த சில வாரங்களாக உடல்ரீதியான அசௌகர்யங்களால் தள்ளிப்போய்க்கொண்டு இருந்த குழந்தை பாக்கியம், வாரத்தின் முதல் பகுதியில் உண்டாகும் வாய்ப்புகள் உருவாகும். பற்பல காரணங்களால் செய்யும் செயல்களில் இருந்த சுணக்க நிலை மாறி, புத்துணர்ச்சி ஏற்படும். புது ஆடைகள் வாங்குவதும், தனலாபம் அடைவதும் உண்டாகும். பிள்ளைகளின் மேல் படிப்புக்கான அச்சாரம் போடுவீர்கள். அவர்களது எதிர்காலம் சிறப்பானதாக அமைய திட்டம் தீட்டுவீர்கள். சிலர் மிகப்பெரிய பதவி உயர்வு பெற்று, அதன் மூலம் செல்வாக்கு பெருவீர்கள். கணவன் மனைவியிடையே அன்னியோன்யம் பெருக, விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய வாரம் இது. நீண்ட நாட்களாக கை கூடாத திருமண பேச்சு வார்த்தை, மங்கல வாத்தியத்திற்கு வித்திடும். பெண்கள் குதூகலமாக இருப்பீர்கள்.
விருச்சிகம்
காரியத்தடை நீங்க ஒரு முறைக்கு இருமுறை கவனமுடன் செயல்படுவீர்கள். மனதுக்குப் பிடிக்காத விஷயங்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உருவாகும். பண நஷ்டத்தை எதிர்கொள்ள சிறந்த திட்டம் ஒன்று தீட்டுவீர்கள். இது அடுத்து வரும் வாரங்களுக்கு லாபத்தை தரும் செயலாக அமையும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அயல்நாடுகளில் பணிபுரிபவர்கள் தினமும் தாயின் நலம் விசாரித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கவனித்துக் கொள்ளுங்கள். உடன் பணிபுரிபவர்கள் மத்தியில் அடுத்தவர்களை பற்றி தேவையில்லாத விஷயங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். பெண்கள் அக்கம் பக்கத்தில் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம்.
தனுசு
இந்த வாரம் உங்கள் வாரம். சொல்லியது நடக்கும். எண்ணியது நிறைவேறும். கேட்டது கிடைக்கும். நண்பர்கள் கூட்டம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களுடன் உல்லாச பயணம் மகிழ்ச்சியின் எல்லைக்கு செல்வீர்கள். சிலர் வெளிநாடு மகிழ் சுற்றுலா மேற்கொள்வீர்கள். பணம், பொருள், ஆடை ஆபரணங்கள் வந்து சேரும். குடும்பத்தில் ஏற்படப்போகும் குதூகலத்தால், சிறு சிறு மனஸ்தாபங்களும் மறந்து போகும். கொஞ்சம் மறதி உண்டாவதால், பயணத்தின் போது உங்கள் உடைமைகளைப் பத்திரப்படுத்திக் கொள்ளவும். பெண்களுக்கு சந்தோஷத்திற்கு பஞ்சம் இல்லாத வாரமாகவும் அமையும்.
மகரம்
நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த வெளிநாட்டு வர்த்தகம் அல்லது வேலைவாய்ப்பு குறித்த சாதகமான தகவல்கள் கிடைக்க பெறுவீர்கள். அதே சமயம் நீண்ட நாட்களாக வெளிநாட்டில் பணியில் இருந்தவர்கள் பலர் சொந்த நாடு திரும்பும் நிலையும் உருவாகும். இது அவர்களை பொருத்தவரை பணம் பற்றாக்குறை ஏற்படும். இருந்தபோதிலும், குடும்பத்தை விட்டு இத்தனை காலம் பிரிந்து இருந்தோமே என்ற கவலை நீங்கி, குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கும் வாரம் இது. தாயாரின் உடல்நலனில் அக்கறை வேண்டும். ஆரோக்கியத்தில் சிறிய பிரச்சனை என்றாலும் அலட்சியம் வேண்டாம். சிறந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும். சிலர் ஆன்மீக பயணம் மேற்கொள்ள நேரிடும். பெண்கள் உடல் நலனில் சற்று கவனம் தேவை.
கும்பம்
உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். வாரத்தின் முற்பகுதியில் தன லாபம் உண்டு. வாரத்தின் இறுதி நாட்களில் சரியான திட்டமிடலால், உங்கள் செயல்கள் ஒவ்வொன்றிலும் வெற்றியைத் தரும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் சிலருக்கு ஏற்படும். சிந்தித்து செயல்படுவதால் பண நஷ்டங்கள் தவிர்க்கலாம். வீட்டுப் பொருட்களை பாதுகாக்க தகுந்த விழிப்புடன் இருக்கவேண்டும். மனதுக்குப் பிடிக்காத செயல் நடக்கக்கூடும். எனினும் உங்கள் அனுபவ அறிவு அதை சாமர்த்தியமாக எதிர்கொள்ளும். எந்த நிலையிலும் கோபத்தைத் தவிர்க்கவும். இது உங்கள் எதிர்காலத்துக்கு பக்கபலமாக இருக்கும். சிலருக்கு புதிய பதவி கிட்டும். சகோதர சகோதரிகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
மீனம்
உறவுகள் மூலம் செலவுகள் உண்டாகும். எனினும் இது எதிர்வரும் வாரங்களில் நல்உறவுக்கு வழிவகுக்கும். மனதுக்குப் பிடிக்காத பணியும், ஒப்புக்கு ஒரு தொழிலையும் செய்து கொண்டிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வேலையும் சிறந்த தொழிலும் அமைக்க அச்சாரம் இடும் வாரமாக இது இருக்கும். எனினும் இதற்கான முயற்சிகளில் சிறிது அலைச்சல் இருக்க வாய்ப்புண்டு. முயற்சிகளுக்கு உரிய பலன் கிடைக்கும். கவலை இல்லாத வாரமாக அமையும். பெண்கள் சற்று கவனமுடனும், எச்சரிக்கையுடனும் செயல்படவேண்டிய வாரம் இது. இது பலவித நஷ்டங்களையும் தவிர்க்கும்.