விபூதி விநாயகர்
‘விபூதி’ என்றால் ‘மேலான செல்வம்’ எனப் பொருள். எனவே இந்த விநாயகருக்கு விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் பெருஞ்செல்வம் வந்து சேரும்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் பொற்றாமரை குளக்கரையில், கன்னி மூலையான தென்மேற்கில் விபூதி விநாயகர் அருள்பாலித்து வருகிறார். இவருக்கு பக்தர்கள் தங்களின் கைகளாலேயே விபூதியை அபிஷேகம் செய்து வழிபாடு செய்யலாம் என்பதுதான் இந்த விநாயகரின் தனிச் சிறப்பு. மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம் ஆகிய நட்சத்திர நாட்களில், இவருக்கு திருநீற்றால் அபிஷேகம் செய்து வந்தால், நாம் நினைத்த காரியம் வெகு விரைவிலேயே நிறைவேறும் என்பது ஐதீகம். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு வந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டுச் செல்லும் பக்தர்கள், தாங்கள் கொண்டு வரும் விபூதியை இந்த விநாயகருக்கு, தங்கள் கரங்களாலேயே அபிஷேகம் செய்து வணங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
Related Tags :
Next Story