திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் சார்பில் வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்


திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் சார்பில் வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்
x
தினத்தந்தி 1 Oct 2023 6:20 PM IST (Updated: 5 Oct 2023 1:43 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் உள்ள வீரராகவப்பெருமாள் கோவில் சார்பில் ஸ்ரீவேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம் கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கி 2-ந் தேதி வரை சாத்துமறையுடன் நடக்கிறது.

ஸ்ரீபெரும்புதூர் வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவத்தை முன்னிட்டு விழாவின் கடைசி நாளான இன்று வீரராகவசாமி உற்சவமூர்த்தி ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளுகிறார். இதை முன்னிட்டு நேற்று இரவு 10 மணிக்கு வீரராகவ சாமி உற்சவர் திருவள்ளூரில் இருந்து புறப்பட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளினார்.

அங்கு பூஜைகள், திருமஞ்சனம், திருவீதி புறப்பாடு முடித்துக் கொண்டு 2-ந் தேதி அதிகாலை ஸ்ரீபெரும்புதூரில் இருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு திருவள்ளூரில் எழுந்தருளுவார். இதற்கான திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story